இன்று உலக பூமி தினம் : மக்களுக்கு மூலிகை செடிகள் வழங்கிய நிர்மலா கல்லூரி மாணவிகள்.!

published 2 years ago

இன்று உலக பூமி தினம் : மக்களுக்கு மூலிகை செடிகள் வழங்கிய நிர்மலா கல்லூரி மாணவிகள்.!

கோவை: நிர்மலா கல்லூரி மாணவிகள் உலக பூமி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மூலிகைச் செடி மற்றும் மரக்கன்றுகள் வழங்கினர். 

உலக பூமி தினத்தை முன்னிட்டு இன்று கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் உலக வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகளை நட வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று கோவை சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா கல்லூரியில் உலக வெப்பமயமாதலை தடுக்க மரக்கன்றுகளை நடுவோம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவிகள் சாலையில் சென்ற பொதுமக்களுக்கு மூலிகைச் செடி மற்றும் மரக்கன்றுகளை கொடுத்தனர். மேலும் பூமியை பாதுகாப்போம், இயற்கை வளங்களை பாதுகாப்போம், மரக்கன்றுகளை நடுவோம் என மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe