கோவையில் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி ஆல்வின் எப்படிப்பட்டவர்?- மாநகர காவல் ஆணையாளர் கூறிய தகவல்...

published 5 months ago

கோவையில் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி ஆல்வின் எப்படிப்பட்டவர்?- மாநகர காவல் ஆணையாளர் கூறிய தகவல்...

கோவை: கோவை PRS வளாகத்தில் , காவலர் குடும்பத்தினருக்கு நடைபெற்ற யோகா பயிற்சி நிறைவடைந்தது. இந்த நிறைவு விழாவில் 
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று காலை கொடிசியா பகுதியில் சுட்டுபிடிக்கப்பட்ட  ஆல்வின் கன்னியாகுமரியில் சரித்திர பதிவேடு குற்றவாளி என தெரிவித்தார். அவர் மீது 
3 கொலை, 2 கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன எம்றார். ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தார்.

ஆல்வின் மீது NBW வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஆல்வினை பல்வேறு இடங்களில் மூன்று, நான்கு மாதங்களாக தனிப்படை தேடி வந்த நிலையில் 15 நாட்களுக்கு முன்பு வேறு மாநிலத்தில் தங்கி இருந்தபோது அவரை தனிப்படை பிடிக்க சென்ற போது தப்பிச் சென்று விட்டதாகவும், தொடர்ந்து இன்று அதிகாலை கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் கொடிசியா பகுதியில் அவரை காவலர்கள் பிடிக்க முற்பட்டனர் என தெரிவித்தார்.
அப்போது ரவுடி ஆல்வின் ராஜ்குமார் என்ற காவலரை கத்தியால் தாக்கியதால் தற்காப்புக்காக ஆல்வின்  சுடப்பட்டார் எனவும் தெரிவித்தார். 

சரித்திர பதிவேடு குற்றவாளிகள் யார்,  யார் தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை கண்காணித்து வருகிறோம் எனக்கூறிய அவர்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe