தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்...

published 4 months ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்...

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது. 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் தமிழ்வேந்தன். முன்னிலையில் உயிர் சக்தி உற்பத்திக்கான தீவனப் பயிர்களை அடையாளம் காண்பதற்காக கையொப்பமானது.

இன்றைய சூழலில், உயிர் சக்தி ஆற்றலுக்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும், இந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு அதிக தாவர உற்பத்தி திறன் மற்றும் புதுபிக்கத்தக்க வளங்கள் கொண்ட தீவணப் பயிர்கள் உகந்ததாகக் கருதப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் கீழ் இயங்கும் தீவனப் பயிர் துறையின் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட தீவனப் பயிர் இரகங்கள் அதிக தாவர உற்பத்தி திறன் கொண்டவை. அதிக கரிமப்பொருள் மற்றும் அதிக தாவர உற்பத்தி திறன் கொண்ட கம்பு நேப்பியர் புல், உயிர் சக்தி உற்பத்திக்கு சிறந்த மூலபொருள் ஆகும்.

முனைவர் தமிழ்வேந்தன். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பாகவும், ரிலையன்ஸ் உயிர் சக்தி நிறுவனத்தின் சார்பாக பசீர் அகமது சிராசி, முதன்மை செயல் அலுவலர், ஆர்.பி.இ.எல். மும்பை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் முனைவர் ஆர்.இரவிகேசவன். தீவனப் பயிர் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். ஆர். புஷ்பம். தீவனப் பயிர் துறையின் விஞ்ஞானிகள். ஆர்.பி.இ.எல். ஹைதராபாத் முதன்மை மேலாளர். ஆர்.பி.இ.எல். மும்பை திரு ஜி.ஆனந்தன். திரு.பாலாஜி பெருமாள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

உயிர் சக்தி ஆற்றல் உற்பத்திக்கு ஏற்ற தீவனப் பயிர்களை எவ்வாறு பயிர் செய்ய வேண்டும் என்ற தொழில் நுட்பத்தை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். ஆர்.பி.இ.எல் நிறுவனத்திற்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe