கோவையில் மண்ணை தோண்டியபோது கிடைத்த யானையின் எலும்புகள்! வனத்துறை அதிர்ச்சி!

published 4 months ago

கோவையில் மண்ணை தோண்டியபோது கிடைத்த யானையின் எலும்புகள்! வனத்துறை அதிர்ச்சி!

கோவை: கோவை வனச்சரகம் கரடிமடை சுற்றுக்கு உட்பட்ட போலாம்பட்டி ஒன்றாவது பிளாக் பெருமாள் கோயில் சரகம் அருகில் பட்டா நில காடு ஒன்றில் மண் எடுப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த பொழுது யானையின் எலும்புக்கூடு ஒன்று தோண்டப்பட்ட மண்ணில் புதைந்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து விசாரணை செய்யப்பட்டதில் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு காட்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்ததும் அந்த யானையை பிரேத பரிசோதனை செய்த பின்பு அங்கேயே புதைத்ததும் தற்பொழுது அதே இடத்தில் மண் தோண்டி எடுக்கப்பட்டதால் அந்த யானையின் எலும்புக்கூடுகள் தெரிய வந்துள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த யானையை பிரேத பரிசோதனை செய்த பொழுது யானையின் தந்தத்தை சேகரித்து வைத்ததாகவும் அதன் அடிப்படையில் தற்போது கிடைத்துள்ள இந்த எலும்பு கூடுகள் அந்த யானையின் உடையது என வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் இந்த பட்டா நிலம் வனப்பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe