டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்- கோவையை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் கைது...

published 4 months ago

டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்- கோவையை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் கைது...

கோவை: கோவை, மருதமலை ஐ.ஓ.பி காலனியை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன்(வயது 68). பிசியோதெரபிஸ்ட் ஆக உள்ளார்.  இவருக்கு சமூக வலைத்தளம் மூலம் 23 வயதான இளம் பெண் அறிமுகமாகி உள்ளார்.

அப்போது ஒரு நாள் இருவரும் நேரில் சந்தித்து பேசினர். அப்பொழுது ஆனந்த கிருஷ்ணன் தனது வீட்டை நேரில் பார்வையிட்டு புதுப்பித்து கட்டி தர வேண்டும் என்று அந்த இளம் பெண்ணிடம் கூறி உள்ளார். அதனால் அந்த இளம் பெண் அவருடைய வீட்டுக்குச் சென்றார். 

அப்பொழுது வீட்டில் யாரும் இல்லை அந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர். அந்த இளம் பெண்ணுக்கு டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உள்ளார். அதை குடித்ததும் இளம்பெண் மயக்கமடைந்ததை அடுத்து கிருஷ்ணன் அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். 

மயக்கம் தெளிந்து எழுந்த இளம் பெண் தான் பலாத்காரம் செய்யப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஆனந்த கிருஷ்ணனிடம் கேட்டபோது வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இது குறித்து அந்த இளம் பெண் கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் காவல் துறையினர் முறையாக விசாரணை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. 

இதை அடுத்து அந்த இளம் பெண் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இளம் பெண்ணின் புகார் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாநகர காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இதை அடுத்து போலிசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் அந்த இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. 

உடனே தேனி மாவட்டம் குமுளி பகுதியில் தலைமறைவாக இருந்த ஆனந்த கிருஷ்ணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe