கோவையில் ஆடம்பர ஆடைகள் கண்காட்சி...

published 4 months ago

கோவையில் ஆடம்பர ஆடைகள் கண்காட்சி...

கோவை: கோவையில் தத்வ்வா டைமண்ட்ஸ் மற்றும் வாசன்சி ஜெய்ப்பூரி சார்பில் பெண்களுக்கான ஆடம்பர ஆடைகள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி ஹோட்டலில், தத்வ்வா டைமண்ட்ஸ் மற்றும் வாசன்சி ஜெய்ப்பூரிபெண்களுக்கான ஆடம்பர ஆடைகள் கண்காட்சி  செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்களுக்கு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

கண்காட்சி குறித்து தத்வ்வா டைமண்ட்ஸ் இணை நிறுவனர் கரண் பாரக் மற்றும் டிசைனர் சப்னா ரங்கா கூறுகையில், "நாங்கள் வடிவமைப்பு, தரம் மற்றும் கைவினை திறன் ஆகியவற்றில் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான மதிப்பை வழங்குகிறோம்.

பாரம்பரியமாகவோ அல்லது சமகாலமாகவோ எதுவாக இருந்தாலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் பூர்த்தி செய்கிறோம்.

கோவையில் எங்களின் ஷோ ரூம் லட்சுமி காம்ப்ளக்சில் அமைந்துள்ளது. வாசன்சி ஜெய்ப்பூர் ஷைலேந்திர சஞ்செட்டியால் நிறுவப்பட்ட இந்த பிராண்ட், அன்றாட உடைகள் முதல் நேர்த்தியான லெஹெங்காக்கள் வரை, ஒப்பிடமுடியாத தரத்துடன் பல்வேறு வகையான ஆடைகளை உருவாக்குகிறது.

வாசன்சி குடும்பம் ஏழு தலைமுறைகளாக ஜெய்ப்பூர் ஜவுளி மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளது. ஷைலேந்திரா மற்றும் அவரது மகன் சம்பிரதி சஞ்சேதியின் தலைமையில் இந்த பிராண்ட் செழுமையான பாரம்பரியத்தை நவீன தாக்கங்களுடன் ஒன்றிணைக்கிறது. ஒவ்வொரு மாதமும் சுமார் 100 புதிய ஸ்டைல்களை உருவாக்குகிறது,.

திறமையான கைவினைஞர்களால் ஆடைகளை வடிவமைக்கின்றனர். கோவைக்கு வருவது இதுவே முதல்முறை என்பதால், இந்தக் கண்காட்சியின் போது தங்களின் பல பொருட்களுக்கு 20-30% தள்ளுபடி வழங்குகிறார்கள், என்றும் பாரம்பரியமான ஆடைகள் மற்றும் அணிகலன்களை விரும்பும் அனைவரும் இந்த கண்காட்சியை பார்வையிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

ராகவேந்திர ரத்தோரின் பெஸ்போக் ஆண்கள் ஆடைகள் மற்றும் ஹவுஸ் ஆஃப் டாடாவின் ஆடம்பர நகை பிராண்டான ஜோயா உட்பட பல முக்கிய ஆடம்பர பிராண்டுகளை கொங்கு மண்டலத்திற்கு கொண்டு வந்த டாக்டர் ஆதித்யன் குகன் மற்றும் சங்கீதா பீட்டர் ஆகியோர் கண்காட்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

கண்காட்சிகள் குறித்து டாக்டர் ஆதித்யன் குகன் கூறுகையில், "கோயம்புத்தூர் மற்றும் கொங்கு மண்டலத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் படிப்படியாக விலைவாசியில் இருந்து தரத்திற்கு முக்கியத்துவம் கொண்டவர்களாக மாறி வருகின்றனர்.

அதைத்தான் எங்கள் கண்காட்சிகள் மூலம் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் இந்த பண்டிகைக் காலத்தில் தனித்துவமான ஆடை மற்றும் அணிகலன்களை  தேடுபவர்களுக்கு  இந்த கண்காட்சி நிச்சயம் மகிழ்விக்கும். என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe