சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டாஸ் ரத்து- கோவையில் வழக்கறிஞர் கூறுவது என்ன..?

published 4 months ago

சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டாஸ் ரத்து- கோவையில் வழக்கறிஞர் கூறுவது என்ன..?

கோவை: சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றத்தில் குண்டாஸ் வழக்கு ரத்து செய்தது குறித்து
கோவை நீதிமன்றம் வளாகத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழிக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது வழக்கறிஞர்
கோபாலகிருஷ்ணன் கூறியதாவது

சவுக்கு சங்கர் மீது 27 வழக்குகள்  போடப்பட்டுள்ளது.

மேலும் 2"வது குண்டாஸ் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. தமிழக அரசு தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டாஸ் வழக்கை வாபஸ் வாங்கியுள்ளது.

அப்படி தமிழக அரசு சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டாஸ் வழக்கை வாபஸ் வாங்காமல் இருந்தால் தமிழகத்தில் இனிமேல் குண்டாஸ் சட்டத்திற்கு இடம் இருந்திருக்காது அதனால் தான் வாபஸ் வாங்கியுள்ளதாக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் குண்டாஸ் போடுவது மனித உரிமை மீறல்.

ஏன் குண்டாஸ் போடப்பட்டுள்ளது என்று நீதிமன்றமே கேள்வி எழுப்பிள்ளது. இந்தியாவில் அதிக அளவில் தமிழகத்தில் மட்டும் தான் குண்டாஸ் சட்டம் போடப்பட்டு வருகிறது.

சவுக்கு சங்கருக்கு எந்த விதமான நிபந்தனையும் நீதிமன்றம் வழங்கவில்லை அவர் சிலையை விட்டு வெளியே வந்தார் எப்பொழுதும் போல் வழக்கமாக யூடியூப் மற்றும் பொதுவெளியில் பேசலாம் என கூறினார்.

நடிகைகள் குறித்து யூடியூப் சேனலில் அவதூறாக பேசிய நபர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அந்த யூடியூப் சேனல் மீது எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆனால் சவுக்கு சங்கர் மீது திட்டமிட்டு அவர் மீதும் அவர் பேட்டி அளித்த யூடியூப் சேனல் மீதும் தமிழக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. சவுக்கு சங்கர் வழக்கில் சவுக்கு சங்கர் அலைகழைப்பது போல் காவல்துறையினரும்  அழைக்கப்பட்டார்கள்.

இதில் காவல்துறைக்கும் மறைமுகமாக தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். சவுக்கு சங்கர் வழக்கில் அரசாங்கம் செய்த தவறுகளை படித்துப் புரிந்து பார்த்ததற்கு 44 நாட்கள் ஆகிவிட்டது.
நக்சலைட்,
ஜம்மு காஷ்மீரில் பகுதியில் இல்லாத அளவுக்கு இருக்கு தமிழகத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது அதிர்ச்சி அளிக்கின்றது என்றார்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe