விவசாயிகளுக்கு மானிய விலையில் கருவிகள்- கோவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேட்டி..

published 4 months ago

விவசாயிகளுக்கு மானிய விலையில் கருவிகள்- கோவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேட்டி..

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் நடைபெறும் “உழவர் தின விழா” கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறுகையில், விவசாயத்திற்கான வேலையாட்கள் குறைந்து கொண்டு வருகிற சூழலில், மூன்றாண்டுகளில் வேளாண் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் பல்வேறு விவசாய கருவிகள் வழங்கப்படுகிறது என்றார். 

கண்காட்சியில் விவசாயம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என்றும் கூறினார்.  

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில், அதிக விளைச்சல் தரக்கூடிய புதிய பயிர் வகைகளும் நவீன தொழில்நுட்பங்களும் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று  வெளியிடப்படுவதாகவும் மண்ணுக்கேற்ற புதிய ரகங்கள் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்த ஆராய்ச்சிகளுக்கு தமிழக அரசு சார்பில் தொடர்ந்து நிதி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe