கோவை: கோவை சங்கனூர் பகுதியில் காட்மா சங்க பொதுக்குழு கூட்டம் தலைவர் சிவக்குமார் தலைமையில், பொதுச் செயலாளர் செல்வராஜ் நடராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி மத்திய அரசுக்கான தீர்மானங்கள்:
கோயம்புத்தூர் திருப்பூர் மாவட்டங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன. இவர்களுள் பெரும்பான்மையானோர் லேபர் சார்ஜ் அடிப்படையில் ஜாப் வொர்க் செய்யும் குறுந்தொழில் முனைவோர் ஆவர். நமது நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகமான வேலை வாய்ப்பு வழங்குவது MSME துறையாகும். நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டி தருவதிலும் MSME பெரும்பங்கு வகிக்கிறது.
![]()

மத்திய அரசால் லேபர் சார்ஜ் அடிப்படையில், ஜாப் ஒர்க்கில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். மேலும் இதுவரை ஜிஸ்டி வரி செலுத்தாத மற்றும் தாமதமாக ஜிஎஸ்டி வரி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு தற்போது விதிக்கப்படும் வட்டி மற்றும் அபராதத் தொகை நீக்கப்பட்டு, ஜிஎஸ்டி வரியை மட்டும் செலுத்தி, தங்கள் தொழிலை தொடர்ந்து செய்ய அனுமதிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு விவசாயத்திற்கான இடுபொருள் வாங்குவதற்கு கிசான் அட்டைகள் இருப்பது போல், தொழில் முனைவோர்களுக்கு மூலப்பொருள் மற்றும் இடுபொருட்கள் வாங்குவதற்கு அவர்களது வங்கி பரிவர்த்தனைகளுக்கு தகுந்தார் போல் எம்எஸ்எம்இ கடன் அட்டைகள் வழங்கப்பட வேண்டும்.
மத்திய அரசின் சார்பில் பொதுத்துறை நிறுவனங்கள் கோவையில் துவங்கப்பட்டு அந்நிறுவனத்தின் ஆர்டர்கள் 50% குறுந்தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் குறுந்தொழில் முனைவோர்களும் ஆர்டர்கள் பெரும் வகையில் வழிமுறைகள் எளிமையாக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் ஒரே சீரான விலையில் மூலப் பொருட்கள் கிடைக்க வழிமுறை செய்யப்பட வேண்டும் மேலும் கோவை மாவட்டத்தில் மூடப்பட்டிருக்கும் மத்திய அரசின் செயில் நிறுவன கிடங்கு மீண்டும் திறக்கப் பட்டு மூலப் பொருட்கள் மொத்த மற்றும் சில்லறை விலையில் தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் குறுந்தொழில் முனைவோர்களுக்கு 5% வட்டியில் கடன்கள் வழங்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது
மாநில அரசுக்கான தீர்மானங்கள்:
13 உயர்த்தப்பட்ட மின்சார நிலை கட்டணம் மற்றும் உச்சபட்ச நேர பயன்பாட்டு கட்டணம் ஆகியவை தொழில் முனைவோர்களுக்கு மிகுந்த நெருக்கடியை தரக்கூடியதாக இருக்கிறது. ஒரு யூனிட்டிர்க்கான மின் பயன்பாட்டு கட்டணம் உயர்த்தப்பட்டது ஏற்றுக்கொள்ள தக்கதாக இருந்தாலும் கூட, நிலை கட்டணம் மற்றும் உச்சபட்ச நேர மின் பயன்பாட்டு கட்டணம் ஆகியவற்றை குறைத்து மீண்டும் பழைய அளவிலேயே மாற்றி அளித்து உதவ வேண்டும்.
நகர்ப்புற பகுதிகளில் நிலவும் இட நெருக்கடியை போக்கிடும் வகையில் தமிழக அரசால் மாநிலம் முழுவதும் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும்.
தற்போது தமிழக அரசால் மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும் தொழில் முதலீட்டு மானியம் வழங்குவதற்கு நீண்ட கால தாமதம் ஆகிறது. எனவே கால தாமதம் இல்லாமல் விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற ஆறு மாத காலத்திற்குள் தொழில் முனைவோர்களுக்கு முதலீட்டு மானியம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
தற்போது மாநகராட்சி அதிகாரிகளால், தொழிற்கூடங்களுக்கு தொழில் வரி செலுத்தப்பட வேண்டும் என்று தொழில் முனைவோர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. எனவே தொழில் வரி செலுத்துவதில் இருந்து குறு மற்றும் குடிசைத் தொழில் முனைவோர்களுக்கு விலக்கு அழைத்து உதவ வேண்டும்.
தமிழகத்தில் மூலப்பொருட்கள் விலை மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருப்பதால் தமிழகத்தை சேர்ந்த தொழில் முனைவோர் மற்ற மாநிலங்களில் உள்ள தொழில் முனைவோர்களுடன் தொழிலில் போட்டியிடும் விதமாக கோவை போன்ற தொழில் நகரங்களில் தமிழக அரசின் சார்பில் மூலப்பொருள் வங்கி துவங்கப்பட்டு குறைவான விலையில் மூலப் பொருட்கள் மொத்த மற்றும் சில்லறை விலையில் தொழில் முனைவோர்களுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.
தமிழக தொழில் முனைவோர் எளிதாக ஏற்றுமதி ஆர்டர்கள் பெரும் வகையில் தமிழக அரசு சார்பில் கோவை மாவட்டத்தில் உலகளாவிய விற்பனையாளர் வாடிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட வேண்டும். அதில் குறுந்தொழில் முனைவோர் தங்கள் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்த வழிவகை செய்யப்பட வேண்டும்.
நமது நாட்டில் மற்ற சில மாநிலங்களில் இருப்பது போல, அரசு நிலங்களில் தொழில் முனைவோர் தங்களது தொழிற்கூடங்களை அமைத்துக் கொள்ள குறைந்தது 75 வருடங்களுக்கு குறைந்த வாடகையில் இடம் அளித்து உதவ வேண்டும்.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் துணைத் தலைவர் J.புவியரசு, R. சோமசுந்தரம், B.பாலன், V.சுதர்சன், செயலாளர்கள் கோல்டன் K. பாலு, A.பொன்னுசாமி, N.ஞானசேகர், R.ராஜ சுந்தர், கௌரவ ஆலோசகர் K.முத்துசாமி, காட்மா சங்க பகுதி செயலாளர்கள் மாரியப்பன்,சாமிநாதன், சக்திவேல், நாகராஜன், சூலூர் பாபு, மலைச்சாமி, ராதாகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன், செந்தில், சதாசிவம், சரவணசுந்தரம், ராஜாங்கம், சுப்பிரமணி, தியாகராஜன், செல்வராஜ், நாதகுமார்,மணிவண்ணன், பகுதி துணை செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.