தேசிய ஊட்டச்சத்து மாத இறுதி நாள்- கோவையில் அருமையாக விழிப்புணர்வு பேரணி மேற்கொண்ட அங்கன்வாடி ஊழியர்கள்...

published 4 months ago

தேசிய ஊட்டச்சத்து மாத இறுதி நாள்- கோவையில் அருமையாக விழிப்புணர்வு பேரணி மேற்கொண்ட அங்கன்வாடி ஊழியர்கள்...

கோவை: தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் கடைசி நாளான இன்று கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் ஒன்றிணைந்து விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.

தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் 1ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அங்கன்வாடி ஊழியர்கள்   செப்டம்பர் மாதம் முழுவதும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர்.

கோவை மாவட்டத்திலும் அனைத்து வட்டாரங்களில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் இதன் கடைசி நாளான இன்று அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும் ஒன்றிணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வ உ சி பூங்கா வரை விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். இந்தப் பேரணியை கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்வேதா சுமன் துவக்கி வைத்தார்.

இந்த பேரணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்களும் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளும்  பங்கேற்றனர். இந்தப் பேரணியில் கலந்து கொண்ட அங்கன்வாடி ஊழியர்கள் உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள் பழங்களை மாலையாக அணிந்தும் மேலும் உடலுக்கு தீங்கு தரும் தின்பண்டங்களை உண்ணக்கூடாது என்று குறிப்பிட்டு மாலையாக அணிந்து கொண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக பல்வேறு வட்டாரங்களை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் பாரம்பரிய கலைகளான ஒயிலாட்டம் கோலாட்டம் உள்ளிட்டவற்றை ஆடினர்.

மேலும் கோவை மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து தானியங்கள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைக்கும் வண்ணம் விழிப்புணர்வு வாகனங்களையும் கூடுதல் ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe