கோவையில் நாயை கவ்வி கொண்டு சென்ற சிறுத்தை- சிசிடிவி காட்சிகள் உள்ளே...

published 4 months ago

கோவையில் நாயை கவ்வி கொண்டு சென்ற சிறுத்தை- சிசிடிவி காட்சிகள் உள்ளே...

கோவை - 30-09-24

கோவையில் வளர்ப்பு நாயை கடித்து கவ்விக் கொண்டு செல்லும் சிறுத்தையின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..!

கோவை, தொண்டாமுத்தூர், வண்டிக்காரனூர், விராலியூர், மருதமலை மதுக்கரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து வளர்ப்பு விலங்குகளான ஆடு, மாடு, கோழி போன்றவற்றை வேட்டையாடி சென்றது.

இதை அடுத்து வனத் துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர்.

கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவாகவில்லை.

இந்நிலையில் வண்டிக்காரனூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிறுத்தை நடமாட்டம் குறித்து செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனை அடுத்து கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்படவில்லை.

இந்நிலையில் வடவள்ளி அருகே உள்ள ஓணப்பாளையம் ஷயாம் சுந்தர் என்பவர் தோட்டத்தில் நேற்று இரவு புகுந்த சிறுத்தை அங்கு வளர்க்கப்பட்ட வந்த வளர்ப்பு நாயே கடித்து கவி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்து உள்ளனர்.

மேலும் பொதுமக்களின் உயிர் சேதம் ஏற்படும் முன் வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, சிறுத்தை பிடித்து வனப் பகுதியில் விட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DAh5PnlAofR/?igsh=eTl6bzl0dDByZXB3

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe