அதிமுகவில் சேர்ந்தால் நல்ல எதிர்காலம் இருக்கிறது- கோவையில் கட்சியில் இணைந்த மாணவர்களிடையே எஸ்.பி.வேலுமணி உரை...

published 4 months ago

அதிமுகவில் சேர்ந்தால் நல்ல எதிர்காலம் இருக்கிறது- கோவையில் கட்சியில் இணைந்த மாணவர்களிடையே எஸ்.பி.வேலுமணி உரை...

கோவை: முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துகொண்டனர்.

 

முன்னாள் முதல்வரும் அதிமுக கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் தலைமையை ஏற்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தங்களை அதிமுகவில் இணைத்து வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோவையை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துகொண்டனர். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். மேலும் கழகத்தில் இணைந்த கல்லூரி மாணவர்களுக்கு, கல்வியிலும், அரசியலிலும் சிறந்து விளங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய எஸ் பி வேலுமணி, இந்த இயக்கத்தில் சேருவது என்பதே பெருமை நாங்கள் எல்லாம் மாணவர்கள் காலத்தில் இந்த இயக்கத்தில் சேர்ந்தோம். நான் மாணவர் அணி பொறுப்பில் இருந்தேன். இந்த கட்சி சாதாரண கட்சி அல்ல அண்ணா திமுகவை பொருத்தவரை எம் ஜி ஆர் 1972 இல் இந்த கட்சியை ஆரம்பித்தார். அப்பொழுது மாணவர்கள் முக்கியமாக இருந்தார்கள். இந்த கட்சியில் தான் படிப்படியாக உயர்கின்ற வாய்ப்பு இருக்கிறது. 31 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்துள்ளோம் அதிகமான திட்டங்களை கொடுத்துள்ளோம். 

கோவை மாவட்டத்தில் மேம்பாலங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் விமான நிலைய விரிவாக்கம் அத்திக்கடவு அவினாசி திட்டம் மருத்துவ வசதிகள் என பெரும்பாலும் திட்டங்களை அதிமுக தான் அளித்துள்ளது. இந்த இயக்கத்தில் இருந்தால் மிகப்பெரிய பெருமை நல்ல எதிர்காலம் இருக்கிறது. இது ஒரு குடும்பம் போன்றது. சுகம் துக்கம் என்ற அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்போம். 

மாணவர்களாகிய நீங்கள் தாய் தந்தையை மதிக்க வேண்டும், நன்கு படித்து வேலைக்குச் சென்று குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் அதனுடனே கட்சி பணிகளையும் ஆற்ற வேண்டும். நல்ல எதிர்காலம் இருக்கின்ற வாய்ப்பு இந்த கட்சியில் தான் உள்ளது வேறு எந்த கட்சியிலும் இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் எங்களை அணுகலாம். அனைத்து பொறுப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe