கோவையில் பிராமண சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

published 4 months ago

கோவையில் பிராமண சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: பிராமணர்களை கேலி செய்வோர் மீது PCR சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கோவையில் பிராமணர்கள் ஆர்ப்பாட்டம்.

பிராமணர்களை  கேலி செய்பவர்கள் மீது PCR சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு கோவை மாவட்ட அனைத்து பிராமண சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் பல்வேறு பிராமண சங்கத்தை சார்ந்தவர்களும் இந்து அமைப்பை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மேலும் இதில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிராமணர்கள் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சனாதனம் காப்போம், பிராமண த்வேஷத்தை ஒழிப்போம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe