கோவை சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா- கடவுள் வேடமிட்டு வந்த பக்தர்கள்...

published 4 months ago

கோவை சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா- கடவுள் வேடமிட்டு வந்த பக்தர்கள்...

கோவை சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவை சங்கனூரில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் வழியில் அன்னியப்பன் வீதியில் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. மிகவும் புகழ் வாய்ந்த இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இந்த கோவிலில் தசரா திருவிழா முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது.

இதற்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தசரா திருவிழா தொடங்கியதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மாலைகளை அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து விட்டு பூசாரி மூலம் கழுத்தில் அணிந்து கொண்டனர்.

இதையொட்ட ஞானமூர்த்தீஸ்வரர்-சமேத முத்தாரம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பல்வேறு பூஜைகள், சிறப்பு அலங்காரங்கள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.  திருவிழா தொடங்கியதையொட்டி தசராக்குழுவினர் இந்து முஸ்லிம், மாரியம்மன்  போலீஸ் என பல்வேறு வேடங்கள் அணிந்து கோவை மாநகர பகுதியில் உலா வர ஆரம்பித்து உள்ளனர்.

தொடர்ந்து குலசையில் உள்ள முத்தாரம்மன் கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe