கோவையில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்ததற்கு 14000 ரூபாய் கட்டணம்.?

published 4 months ago

கோவையில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்ததற்கு 14000 ரூபாய் கட்டணம்.?

கோவை: கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம், தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 

இவரது நண்பர் அப்துல் ரகுமான் என்பவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு தனது இருசக்கர வாகனத்தை கடன் கொடுத்து உள்ளார். இதைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி பகுதியில் அப்துல் ரகுமான் இருசக்கர வாகனத்தில் சென்ற போது காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது அவர் மது போதையில் வாகனத்தை ஒட்டி வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவர் ஓட்டி வந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் நீதிமன்றம் சென்று அபராத தொகை 10 ஆயிரத்தை செலுத்தி  உள்ளார் மாணிக்கம். அபராத தொகை கட்டிய அந்த ரசீதை காவல் துறையினரிடம் காண்பித்தார். 

காவல் துறையினர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் வாகனத்தை நிறுத்தி உள்ளதாகவும் அதற்கு உண்டான டோக்கனை மாணிக்கத்திடம் கொடுத்து உள்ளனர். அங்கு சென்ற மாணிக்கம் இருசக்கர வாகனத்தை நிறுத்திய அதற்கான தொகை ரூ. 14,040 கொடுக்க வேண்டும் என கூறி உள்ளனர். 

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணிக்கம் நீதிமன்றத்தில் அபராதம் பத்தாயிரம் செலுத்திய பின்னரும் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு 14,040 கேட்பது சரியா என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு மாநகராட்சி  நாள் ஒன்றுக்கு ரூபாய் ஐந்து என்று நிர்ணயனம் செய்து உள்ளனர். ஆனால் காவல் துறையினர் வந்து நிறுத்தும் வாகனத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 40 வசூல் செய்வதாகவும் கூறி உள்ளார் வாகனம் நிறுத்தும் இடத்தின் ஊழியர்.

நண்பனுக்கு வாகனத்தை கடன் கொடுத்த தான் கடந்த 351 நாட்கள் கடந்து நீதிமன்றத்தில் ரூபாய் 10,000 அபராதம் செலுத்திய பின்னரும் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு மேலும் 14,040 பணம் கேட்டு உள்ளதை கண்டு செய்வது அறியாது விழி பிதுங்கி நிற்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார் மாணிக்கம்....

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe