கோவையில் ஆயுதபூஜையை கொண்டாடிய சிறு குறு தொழில் நிறுவனங்கள்...

published 4 weeks ago

கோவையில் ஆயுதபூஜையை கொண்டாடிய சிறு குறு தொழில் நிறுவனங்கள்...

கோவை: நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு மக்கள் அவர்களது இல்லங்களில் உள்ள பொருட்களுக்கும், தொழில்துறையினர் அவர்களது தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களுக்கும் வாகனங்களுக்கும்  பூஜை செய்து வழிபடுவர்.

பெரும்பாலும் வாகனங்கள், தொழிற்சாலை இயந்திரங்களுக்கு
வாழை கன்றுகள் கட்டியும்,மலர் மாலை அணிவித்தும், சூடம் ஏற்றி பூசணிக்காய் உடைத்தும் வழிபாடு செய்வர். இன்றைய தினம் இது போன்ற வழிபாடு செய்வதால் தொழில் பெருகும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

அதன்படி அந்த  இன்றைய தினம் கோவையில் சிறு,குறு தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கோவையில் அதிகளவில் தொழில் நிறுவனங்கள் உள்ளன.கோவை மாவட்டத்தில் மட்டுமே 50,000 க்கும் மேற்பட்ட  தொழில் நிறுவனங்கள் உள்ளது.

கோவையில் உள்ள ஜவுளி, கிரைண்டர்,பம்ப்செண்ட்,பவுண்டரி, ஆட்டோ மொபைல் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் லட்சகணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

முதலாளிகள் மற்றும் தொழிலாளிகள் என பாகுபாடுயின்றி அனைவரும் சமமாக இன்று சேர்ந்து தொழில் நிறுவனங்களில் பூஜை செய்து கடவுளை வழிபட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe