கோவையில் தொழில் நிறுவனங்களுக்கான கடன் வசதியாக்க முகாம்- எங்கே? எப்போது?

published 3 weeks ago

கோவையில் தொழில் நிறுவனங்களுக்கான கடன் வசதியாக்க முகாம்- எங்கே? எப்போது?

கோவை: கோவை மாவட்டத்தில் ஏறத்தாழ 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் உற்பத்தி, சேவை மற்றும் வியாபார தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன.

புதிதாக நிறுவனங்கள் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களை விரிவாக்கம் செய்யவும் மற்றும் நடைமுறை மூலதனத்திற்காகவும் இந்நிறுவனங்களுக்கு நிதி வசதி தேவைப்படுகிறது. எனவே, தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வங்கி அதிகாரிகளையும் அழைத்து கடன் வசதியாக்கல் முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி வருகின்ற 15.10.2024 அன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் கொடிசியா வர்த்தக வளாகத்தில் அமைந்துள்ள" D" அரங்கில் நடைபெற உள்ளது. எனவே குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, கேட்டுக்கொண்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe