கோவையில் கொடூர விபத்து! கொட்டத்தை அடக்குமா அரசு? சிசிடிவி காட்சிகள் உள்ளே!

published 3 weeks ago

கோவையில் கொடூர விபத்து! கொட்டத்தை அடக்குமா அரசு? சிசிடிவி காட்சிகள் உள்ளே!

கோவை: கோவை புலியகுளம் பகுதியில் அதி வேகமாச் சென்ற லாரி, சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியதில் ஒருவர் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை புளியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மருதாசலம். இவர் சௌரிபாளையம்-புலியகுளம் சாலையில் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே அதிவேகமாக செப்டிக் டேங்க் லாரி ஒன்று வந்தது. அந்த லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி, பின்னர் சாலையோரம் நடந்து வந்து கொண்டிருந்த மருதாசலம் மற்றும் அவர் நண்பர் மீதும் மோதியது.

இதில் கார் மீது தூக்கிவீசப்பட்டு, லாரி சக்கரத்தில் சிக்கிய மருதாசலம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செப்டிக் டேங்க் லாரியை இயக்கிய பிரவீன் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். விபத்து தொடர்பாக போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்தியவர்

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி லாரி டிரைவர் மீது பொதுமக்களுக்கு ஆத்திரத்தை கிளப்பியுள்ளது. வீடியோவை காண: https://www.instagram.com/insights/media/3477071643854146145/?hl=en

ஏற்கனவே தனியார் பேருந்து ஓட்டுனர்கள் கண்மூடித்தனமாக பேருந்தை இயக்குவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போலீசார் இணைந்து விபத்துகளை தடுக்கவும், சில டிரைவர்களின் கொட்டத்தை அடக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe