மீண்டும் தி.மு.க தான்... கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர்!

published 3 days ago

மீண்டும் தி.மு.க தான்... கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர்!

கோவை: தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சி அமையும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக கோவை வந்திருக்கும் ஸ்டாலின் விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் அமைத்த ஐ.டி பூங்கா கட்டடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, விமான நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நில எடுப்பில் இருந்து விளக்கு அளிக்கும் உத்தரவுகளை நில உரிமையாளர்களிடம் வழங்கினார்.

பின்னர், கெம்பட்டி காலனியில் உள்ள தங்க நகை தொழிலாளர்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். இதனிடையே அங்குள்ள நகைப்பட்டறை ஒன்றுக்கு திடீர் விசிட் அடித்தார். அங்கிருந்து குறிச்சி தொழிற்பேட்டை சென்ற ஸ்டாலின் தொழிலாளர் விடுதியைத் திறந்து வைத்தார்.

பின்னர் போத்தனூரில் தி.மு.க நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள இளைஞர்களிடம் கொள்கைகளை விதைப்பது முக்கியம். இளைஞர்களைக் கொள்கை வீரர்களாக உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமை.

பேச்சாளர்களை வைத்து பாசறைக்கூட்டங்கள் நடத்த வேண்டும். தமிழகத்தில் எந்த கட்சிக்கும் இல்லாத கட்டமைப்பு தி.மு.க-வுக்கு உள்ளது.

தினமும் 2 மணி நேரமும், வார இறுதி நாளில் ஒரு நாளும் நிர்வாகிகள் கட்சிக்காக செலவிட வேண்டும். கட்சிக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி உழைக்கும் தொண்டர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். என்று பேசினார்.

கூட்டம் முடிந்து வெளியே வந்த முதலமைச்சரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அப்போது அவர் கூறியதாவது:

கோவை மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தமிழகத்தில் மீண்டும் தி.மு.க ஆட்சி அமையும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் வரவேற்பு இருந்தது.

கோவை மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவை அனைத்தும் நிறைவேற்றித்தரப்படும். தங்க நகை தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும். என்று கூறி புறப்பட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe