கோவையில் CRPF வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 1 week ago

கோவையில் CRPF வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு- வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை துடியலூர் அடுத்த கதிர்நாயக்கன்பாளையம் சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியில் 96-வது பி-பேட்சு நேரடியாக பயிற்சி பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் (சப்-ஆர்டினெட் ஆபிசர்ஸ்) பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்துகொண்ட  96-வது பி-பேட்சில் 133 சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சியில் தேர்ச்சி பெற்று அவர்கள் நேரடியாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். 

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியின் முதல்வர் மற்றும் ஐ.ஜி வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். பயிற்சி முடித்த 7 பெண்கள் உட்பட 133 பேர்களுக்கு சப்-ஆர்டினெட் ஆபிசர் பேட்சு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் ரேங்க் அடிப்படையில் சிறந்த விளங்கிய பெஸ்ட் ஆல் ராவுண்டர் மற்றும் பெஸ்ட் பி.ஒ.ஏ.சி.வெங்கட பிரபாகர், பெஸ்ட் இன் இண்டோர் திருஷ்லா தோமர், பெஸ்ட் இன் அவுட்டோர் ஹரிராம் சிங், பெஸ்ட் இன் பயர் பாரத், ஆகிய 4 சப்-ஆர்டினெட் ஆபிசர் வீரர்களுக்கு கோப்பைகளை வழங்கினார். 

கடந்த 2023 நவம்பர் முதல் இந்த 133 வீரர்களுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்சி ஆசிரியர்கள் மூலம் ஒழுக்கம்,அறிவு,திறமை மற்றும் அணுகுமுறை போன்ற மேம்பட்ட பயிற்சிகளும்,பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு பாடத்திட்டங்கள்,உரிமைகள், கல்வி,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,சமூக விழிப்புணர்வுகள்,மத சம்பந்தமான காரணங்கள்,பாலினம் தெளிவுகள், மொழியியல் பின்னணி என்று மிகவும் உணர்திறன் மிக்க பயிற்சிகளை வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

இங்கு பயின்ற வீரர்கள் குண்டு வீச்சு,அணுக்கதிர் வீச்சு,வேதியல் விழைவுகள் மற்றும் இயற்கை, செயற்கை அழிவுகளில் கதிர் வீச்சால் உண்டாகும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான பயிற்சிகளை முறையாக எடுத்துள்ளனர். 

பின்னர் விரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.இதில்
பெண்களின் கேரளா நடனம்,  கமெண்டோ வீரர்களின் யோக நிகழ்ச்சிகள்,பி.டி.நிகழ்ச்சிகள், வழுக்கு மரம் ஏறுதல்,ஓடு உடைத்தல் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

இதில் கமெண்டண்ட் ஆண்டனி ஜென்சன்,அதிகாரிகள்,வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர். 

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DBjce-2grF5/?igsh=ZmN5cHh3am1kc3lx

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe