தீபாவளி பண்டிகை- கோவையில் 7 பேருந்து நிலையங்கள்- எந்த ஊருக்கு எந்த பேருந்து நிலையம்?- விவரங்கள் இதோ...

published 3 weeks ago

தீபாவளி பண்டிகை- கோவையில் 7 பேருந்து நிலையங்கள்- எந்த ஊருக்கு எந்த பேருந்து நிலையம்?- விவரங்கள் இதோ...

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஏழு பேருந்து நிலையங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்தான செய்தி குறிப்பில் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு 30-ஆம் தேதி வரை கோவை மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக 2495 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளது.

அதன்படி சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் அடுத்துள்ள தென் மாவட்டங்களுக்கு 1030 பேருந்துகளும், சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கரூர் மார்க்கமாக செல்லும் 300 பேருந்துகளும், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, சேலம், திருப்பூர் செல்லும் 540 பேருந்துகளும்,

உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழனி, பாலக்காடு செல்லும் 100 பேருந்துகளும் மேட்டுப்பாளையம் பே,ருந்து நிலையத்திலிருந்து திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல் செல்லும் 100 பேருந்துகளும் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊட்டி, குன்னூர், கூடலூர், செல்லும் 175 பேருந்துகளும் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், ராஜபாளையம் செல்லும் 350 பேருந்துகளும் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் சிங்காநல்லூர் மற்றும் சூலூர் பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் பேருந்துகள் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் பேருந்துகள் அனைத்தும் பயணிகளை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மட்டுமே இறக்கி விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்து பேருந்து நிலையங்களிலும் பயணிகளுக்காக குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தற்காலிக கூடாரங்கள், மின்விளக்கு வசதி, சுகாதார வசதி ஆகியவை சம்பந்தப்பட்ட ஊராட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகளை பொருத்தவரை வெளி மாவட்டங்களுக்கு இயக்க இருக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கொடிசியாவில் இருந்து மட்டுமே இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொடிசியாவில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் அவிநாசி சாலை வழியாகவும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் சின்னியம்பாளையம், நீலாம்பூர், L&T பைபாஸ் வழியாகச் சென்று திருச்சி சாலையை சென்றடைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு காந்திபுரம் பகுதியில் மத்திய சிறைச்சாலை திடல், மத்திய சிறைச்சாலை இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில்,  மாநகராட்சி நிறுத்தம், மாநகராட்சி பள்ளி வளாக மைதானம், மார்டின் திடல் மற்றும் லட்சுமி காம்ப்ளக்ஸ் வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தம் செய்து கொள்ளலாம் எனவும்,
உக்கடம் பகுதியில் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜ வீதி, உக்கடம் மேம்பாலம் அருகில், கோனியம்மன் கோவில் எதிர்ப்புறம் உள்ள சாலை, நரசிம்மர் கோவில் நெடுஞ்சாலையில் போத்தீஸ் சென்னை சில்க்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில், ராயல் தியேட்டர் பிபி சாலை ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்தாலோ பேருந்துகள் இயக்குவதில் குறைபாடுகள் சந்தேகங்கள் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு தொலைபேசி எண் 0422- 2306051 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe