கோவை-திண்டுக்கல் முன்பதிவில்லா மெமு ரயில் புறப்படுகிறது...!

published 1 week ago

கோவை-திண்டுக்கல் முன்பதிவில்லா மெமு ரயில் புறப்படுகிறது...!

கோவை: பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கோவை-திண்டுக்கல் இடையே மெமு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது:

கோவை ஜங்சனில் இருந்து திண்டுக்கல் ஜங்சனுக்கு முன்பதிவில்லா சிறப்பு மெமு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இன்று முதல் வரும் நவம்பர் 6ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

இன்று காலை 9.35 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில் (வண்டி எண்: 06106)  மதியம் 1.10 மணிக்கு திண்டுக்கல் சென்றடைகிறது. திண்டுக்கல்லில் இருந்து (வண்டி எண்: 06106) மதியம் 2 மணிக்கு இந்த ரயில் கோவை புறப்படுகிறது.

இந்த ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe