கோவையில் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள் !!!

published 2 days ago

கோவையில் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள் !!!

கோவை: கார்த்திகை மாதத்தில் முதல் நாளான இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

வருடம் தோறும் கார்த்திகை மாதத்தில் முதல் நாளில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலை கோவை போத்தனூரில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர்.

 ஐயப்பனை தரிசித்து விட்டு கோவில் பூசாரி பக்தர்களுக்கு மாலை அணிவித்தார். சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து 48 நாட்கள் மண்டல விரதத்தை தொடங்கினர். பக்தர்கள் இந்த 48 நாட்களும் கருப்பு, நீலம், மஞ்சள், சிவப்பு உள்ளிட்ட வேஷ்டிகளை கட்டிக்கொண்டு, துளசி மாலை, ஸ்படிகை மாலை, சந்தன மாலைகளை, சரணகோஷத்துடன் அணிந்து விரதம் இருப்பார்கள். 

48 நாட்கள் மண்டல விரதம் இருந்து, இருமுடி கட்டி,  சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe