கோவையில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் பயங்கர தீ! - VIDEO

published 2 months ago

கோவையில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் பயங்கர தீ! - VIDEO

கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே மாநகராட்சியின் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தொடர்ந்து தீ மளமளவென குப்பைகளில் பரவியதில், கடும் புகை மூட்டம் எழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த கோவை தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, சுமார் 2 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்து காரணமாக புகை மூட்டம் ஏற்பட்டதில் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் கடும் சிரமம் அடைந்தனர். Video https://www.instagram.com/reel/DClDMbcvzX2/?igsh=M29qeTlwaG1ienlj

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe