கோவையில் நேற்று எந்த இடத்தில் எவ்வளவு மழை பெய்தது தெரியுமா?

published 3 weeks ago

கோவையில் நேற்று எந்த இடத்தில் எவ்வளவு மழை பெய்தது தெரியுமா?

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 626 மி.மீ மழை பொழிந்துள்ளது. அதிகபட்சமாக கோவை தெற்கு தாலுகா அலுவலகம் சுற்றுவட்டாரத்தில் 78 மி.மீ மழை பதிவானது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் விடிய மழை பெய்தது. நேற்று மதியம் முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

இதனிடையே கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு குறித்த விவரங்களை பேரிடர் மேலாண்மைத் துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அதன் விவரம் (மீ.மீட்டரில்) பின்வருமாறு:

விமான நிலையம் - 58.50

வேளாண் பல்கலைக்கழகம் - 58.௫௦

பெரியநாயக்கன்பாளையம் - 5

மேட்டுப்பாளையம் - 3.03

பில்லூர் அணை - 2

அன்னூர் - 12.40

கோவை தெற்கு தாலுகா - 78

சூலூர் - 38

வாரப்பட்டி - 27

தொண்டாமுத்தூர் - 18

 சிறுவாணி அடிவாரம் - 12

மதுக்கரை தாலுக்கா - 7

போத்தனூர் ரயில் நிலையம் - 9

பொள்ளாச்சி தாலுக்கா - 52

மாக்கினாம்பட்டி - 64

கிணத்துக்கடவு - 23

ஆனைமலை - 1

ஆழியார் - 6

சின்கோனா - 23

சின்னக்கல்லாறு - 23

வால்பாறை பிஏபி - 53

வால்பாறை தாலுக்கா - 5

சோலையாறு - 13

என கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 626 மி.மீ மழை பொய்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe