கோவையில் அவலம்... குட்டி சென்னையாக மாறுகிறதா எனு விமர்சனம்!

published 3 weeks ago

கோவையில் அவலம்... குட்டி சென்னையாக மாறுகிறதா எனு விமர்சனம்!

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாகவே மதியத்திற்கு மேல் துவங்கி இரவு வரை பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்கள் மழை நீரினால் சூழ்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பல்வேறு இடங்களில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றன.

இந்நிலையில் இன்று காலை லாலி ரோடு- வடவள்ளி செல்லும் சாலையில் மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. குறிப்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் செயல்படும் உழவர் நலத்துறை அலுவலகம் இருக்கும் வளாகம் முழுவதும் மழை நீரால் சூழ்ந்ததுள்ளது. மேலும் சாலைகளிலும் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe