கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...

published 3 weeks ago

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...

கோவை: விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் நேற்றிரவு 10.30 மணி அளவில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இந்த மிரட்டலை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையின் வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் BDDS பிரிவினர் அதிகாலை வரை கோவை விமான நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர் அதிகாலை வரை நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.

இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாநகரில் கடந்த சில தினங்களாக பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் , விமான நிலையம் என பல்வேறு தரப்பிற்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe