தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவையில் மிதக்கும் சோலார்- பயன் என்ன?

published 3 weeks ago

தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவையில் மிதக்கும் சோலார்- பயன் என்ன?

கோவை: கோவை மாவட்டம் வளர்ந்து வரும் நகரங்களில் முக்கியமான நகரமாகும். நாளுக்கு நாள் பல்வேறு துறைகள் வளர்ச்சி அடைந்து கொண்டே வரும் நிலையில் அதற்கான அத்தியாவசிய தேவைகளும் தேவைப்படுகின்றனர். அதிலும் மின்சாரம் என்பது முக்கிய பங்காற்றி வருகிறது.

 

தற்போதைய சூழலில் பல்வேறு இடங்களில் சோலார் சிஸ்டம் மூலம் மின் உற்பத்தி அதிகளவு செய்து வரும் நிலையில்  உக்கடம் பெரிய குளத்தில், 50 சென்ட் நீர் மேற்பரப்பில், 1.45 கோடி ரூபாயில் 'மிதக்கும் சோலார்' அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு, 693 யூனிட் மின்னுற்பத்தி கிடைக்குமென கூறப்படுகிறது.

முதல்வரின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 1.45 கோடி ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டு சோலார் அமைக்கப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் முழுமையாக முடிவதற்கு சில நாட்கள் ஆகும் என தெரிகிறது. மேலும் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக நீரின் மேற்பரப்பில் மிதக்கும் சோலார் அமைக்கப்பட்டுள்ளது இதுவே ஆகும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe