கோவை அவினாசி சாலையில் நான்காவது கட்டமாக பாதசாரிகளுக்கான பெலிகான் சிக்னல் அறிமுகம்.

published 3 weeks ago

கோவை அவினாசி சாலையில் நான்காவது கட்டமாக  பாதசாரிகளுக்கான பெலிகான் சிக்னல்  அறிமுகம்.

கோவை: போக்குவரத்து நிறைந்த பகுதிகளில்   சாலையைக் கடக்கும் பொதுமக்கள் முறையான இடங்களில் பாதையை கடக்க வேண்டும் என  .கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கேட்டு கொண்டுள்ளார்.


தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முக்கிய இடத்தை பிடித்துள்ளது..
மேம்பாலங்கள்,சாலை வசதிகள்,உட்கட்டமைப்புகள் அதிகரித்து வரும் நிலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக  மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அதன் படி மக்கள் கூடும் இடங்களில் ஸ்மார்ட் சிக்னல்கள் பொருத்தப்பட்டு வருகின்றன..
 

இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச்.மருத்துவமனை அருகே மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் சிக்னலை கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார.இந்த பெலிகான்  சிக்னல் மூலம் 
திருப்பூர்,ஈரோடு,சேலம்,போன்ற உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து பேருந்தில் வரும் ஆயிரக்கணக்கான  பொதுமக்கள் எளிதாக சாலையை கடக்க முடியும்..
 

சாலை விபத்தைத் தடுக்கும் நோக்கிலும், பாதசாரிகளுக்கு உதவும் வகையிலும் இந்த  ஸ்மார்ட் சிக்னல் அமைக்கப்பட்டு வருவதாக கூறிய அவர்,போக்குவரத்து நிறைந்த பகுதிகளில்    சாலையை கடக்கும் பொதுமக்கள் முறையான இடங்களில்   சாலையைக் கடக்க வேண்டும் என தெரிவித்தார்.. அவினாசி சாலையில் நான்காவது பெலிகான் சிக்னலாக அமைக்கப்பட்ட இந்த சிக்னல் தானியங்கி முறையில் இயங்கும்  இந்த சிக்னலை கூட்டம் அதிகமாக இருந்தால் பொதுமக்களும்  உபயோகிக்கலாம் என்றும் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe