கோவையில் 20 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…

published 2 weeks ago

கோவையில் 20 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…

கோவை: கோவை உக்கடம் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் இந்து சமய அற நிலையத் துறை சார்பில் இருவது ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

இதில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார் மேயர் ரங்கநாயகி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மணமக்களுக்கு 4 கிராம் தங்க மாங்கல்யம் மிக்ஸி கிரைண்டர் உட்பட 45 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில் கடந்த இரண்டு ஆண்டாக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவச திருமணம் நடத்தப்பட்டு வருகிறது

கடந்த ஆண்டு 35 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டது.‌ அலுவலகத்தில் முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு இந்த திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு ஜோடிக்கும் தலா ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe