கோவை மக்களே, ரயிலில் பட்டாசு கொண்டு வர திட்டமா? மாட்டிப்பீங்க!

published 4 weeks ago

கோவை மக்களே, ரயிலில் பட்டாசு கொண்டு வர திட்டமா? மாட்டிப்பீங்க!

கோவை: கோவை, போத்தனூர், வடகோவை ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் மோப்பநாய் பிரிவினர் நேற்று பட்டாசு பார்சல் சப்ளை செய்வதை தடுக்கும் வகையில் சோதனை நடத்தினர்.

பார்சல் பிரிவில் உள்ள அனைத்து பார்சல்களும் பட்டாசு வெடி இருக்கிறதா? என சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டது.

ரயிலில் பட்டாசு பார்சல் அனுப்ப தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பட்டாசு மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை ரயில்களில் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க ரயில் நிலையங்களில் ஸ்கேனர் மூலமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

பல்வேறு இடங்களில் பட்டாசு மற்றும் வெடிபொருட்களை ரயிலில் கொண்டு செல்ல கூடாது. அனுமதியின்றி வெடிபொருட்களை எந்த இடங்களிலும் பதுக்கி வைக்க கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பஸ்களிலும் போலீசார் பட்டாசு பார்சல் உள்ளதா? என சோதனை செய்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe