மகளிர் விடுதியில் ரூ.8 லட்சம் மோசடி- பெண் வார்டன் மீது வழக்கு…

published 1 week ago

மகளிர் விடுதியில் ரூ.8 லட்சம் மோசடி- பெண் வார்டன் மீது வழக்கு…

கோவை: கோவையில் உள்ள மகளிர் விடுதியில் கூடுதல் நபர்களை தங்க வைத்து ரூ. 8 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக பெண் வார்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை காளப்பட்டி ரோடு நேரு நகரை சேர்ந்தவர் மோகனசுந்தரம் மனைவி பிரபாவதி(37). இவர் அங்கு மகளிர் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள், கல்லூரி மாணவிகள் இங்கு தங்கி உள்ளனர். இந்த விடுதியில் திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த ஆர்த்தி(24) என்பவர் கடந்த 5-11-2023ம் தேதி முதல் வார்டனாக வேலை பார்த்து வருகிறார். அவர் சேரும் போது 70 பேர் விடுதியில் தங்கி இருந்தனர். 

அதன்பின்பு 16 பேர் என மொத்தம் 86 பேர் தங்கி உள்ளதாக பிரபாவதியிடம் கணக்கு, வழக்குகளை ஆர்த்தி ஒப்படைத்தார். இதில் முரண்பாடு உள்ளதாக சந்தேகம் அடைந்த பிரபாவதி விடுதியில் நேற்று சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு மொத்தம் 105 பேர் தங்கி இருந்ததும், 19 பேர் தங்கி இருப்பதை மறைத்து அதனை கணக்கில் சேர்க்காமல் ஆர்த்தி மறைத்துள்ளதும் தெரியவந்தது. 

இதன் மூலம் 19 பேரிடம் அட்வான்ஸ் தொகை, மாத வாடகை என ரூ. 8 லட்சம் வாங்கி ஆர்த்தி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது குறித்து பிரபாவதி பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் ஆர்த்தி மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe