கோவையில் ஆள் மாறாட்டம் செய்து 75 லட்சம் நில மோசடி- 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது…

published 2 days ago

கோவையில் ஆள் மாறாட்டம் செய்து 75 லட்சம் நில மோசடி- 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது…

கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார். இவர் தான் அண்ணன் வேணுகோபால் உடன் சேர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு குறிச்சி பகுதியில் நிலம் வாங்கினார். 

பின்னர் அதில் இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தை இரண்டு பேரும் சேர்ந்து கவனித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டில் வேணுகோபால் நிறுவனத்தில் இருந்தார். அப்பொழுது கோவையைச் சேர்ந்த முபாரக் அலி என்பவர் அங்கு வந்தார். அவர் வேணுகோபாலிடம் தான் ரியல் எஸ்டேட் நடத்தி வருவதாகவும், இந்த இடத்தை அவர் தான் வாங்கி இருப்பதால் உடனடியாக நீங்கள் காலி செய்ய வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
 

அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வேணுகோபால் உடனே தனது தம்பி விஜயகுமாருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அவர் அங்கு வந்து அவரின் பெயரில் அந்த இடம் இருப்பதற்கான ஆவணங்களை காட்டிய, பின்னர் அவர் அங்கு இருந்து சென்று விட்டார். பின்னர் சிறிது நாள் கழித்து விஜயகுமாருக்கு ஒரு அழைப்பு வந்தது. 

அதில் பேசிய நபர் அந்த இடத்துக்கு தற்போதைய மார்க்கெட் விலை எவ்வளவோ அதை நீங்கள் என்னிடம் கொடுத்தால் அந்த இடத்தை உங்களுக்கே கிரயம் செய்து கொடுப்பதாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களை சரிபார்த்தார். அப்பொழுது கடந்த 2022 ஆம் ஆண்டு பாக்கியம் என்பவரிடம் முபாரக் அலி அந்த இடத்தை வாங்கி இருப்பதாக இருந்தது. தன்னுடைய நிலம் வேறு ஒரு நபரின் பெயரில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர். இது குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முபாரக் அலி, பாக்கியம், சாந்தி, கௌதமன், நிஷார் அகமது ஆகியோர் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டு போலி ஆவணங்களை தயாரித்து விஜயகுமாரின் நிலத்தை முபாரக் அலிக்கு விற்பனை செய்ததாக பத்திரப் பதிவு செய்தது தெரிய வந்தது. அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூபாய் 75 லட்சம் ஆகும். இதை அடுத்து மோசடி செய்த ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வக்கீல் ஒருவரை போலீசார் தேடுவதுடன், வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா ? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe