கோவையில் துவங்கியது இராணுவ தகுதி தேர்வுகள்...

published 4 days ago

கோவையில் துவங்கியது இராணுவ தகுதி தேர்வுகள்...

கோவை: இந்திய ராணுவத்திற்கான ஆட்கள் தேர்வு முகாம் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று முதல் துவங்கியது. இன்று முதல் 16-ம் தேதி வரை நடைபெறும் இம்முகாமில் ஒவ்வொரு நாளும் மாநிலங்கள் வாரியாக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. 

முதல் நாளான இன்று உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. ராணுவ படை வீரர்கள், சமையலர் கள்,சிகை அலங்கார நிபுணர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கான இந்த தேர்வானது நடத்தப்படுகிறது. 

முதல் நாளான இன்று தெலுங்கானா, குஜராத், கோவா,பாண்டிச்சேரி, லட்சத்தீவுகள்,டையுடாமன் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. நாளை ஆந்திரா,கர்நாடக மாநிலங்களுக்கும் நாளை மறுதினம் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் வருகிற 7 மற்றும் 8ம் தேதி என இரண்டு நாட்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் தேர்வுகள் நடைபெற உள்ளது. 18 வயது முதல் 30 வயது வரையிலானவர்களுக்கு  ஒரு கட்டமாகவும் 31 வயது முதல் 42 வயது வரையிலானவர்களுக்கு மற்றொரு கட்டமாகவும் தேர்வுகள் நடைபெற உள்ள சூழலில் இதற்காக நேற்று முதலே கோவையில் ஏராளமான இளைஞர்கள் குவியத் தொடங்கினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe