கோவையில் தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறும் தேதி அறிவிப்பு...

published 14 hours ago

கோவையில் தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறும் தேதி அறிவிப்பு...

கோவை: பிரதம மந்திரியின் National Apprentice Mela
தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் (NAPS) தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக கோயம்புத்தூர் மாவட்ட அளவில் பிரதம மந்திரியின் தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் (PM NAM) அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கோவையில் 20.01.2025 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் மத்திய/ மாநில அரசு நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களும் மற்றும் கோயம்புத்தூர்/ மாவட்டத்திலுள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் பங்கேற்று தேர்வு பெற்றால் தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (NAC) வழங்கப்படும். தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது. மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் NAC பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது. தொழிற்பழகுநர் பயிற்சியின்போது உதவித்தொகை, தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப தொழில் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி/ தோல்வி அடைந்தவர்கள் மற்றும் அரசு / தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் NCVT மற்றும் SCVT தேர்ச்சி பெற்றவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.
 

மேலும் விபரங்களுக்கு, உதவி இயக்குநர், மாவட்டதிறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழிற்பயிற் நிலைய வளாகம், கோயம்புத்தூர்-29 அவர்களை 9566531310, 9486447178 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளளலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe