நிரம்பி வழிகிறது கோவை ஜங்க்சன்...

published 2 weeks ago

நிரம்பி வழிகிறது கோவை ஜங்க்சன்...

 

கோவை: தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற மக்கள் திரும்பி வருவதால் கோவை ரயில் நிலையத்தில் மக்கள் வெள்ளம் அலைமோதி வருகிறது.

தொழில் நகரான கோவையில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். கோவையில் கல்லூரிகள் அதிகம் இருப்பதால் அண்டை மாநிலங்களில் இருந்து மாணவர்கள் அதிகளவில் இங்கு தங்கு படித்து வருகின்றனர்.

இதனிடையே அக்டோபர் 31ம் தேதி நாடு முழுவதும் தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு, கோவையில் இருந்து 30ம் தேதியே பொதுமக்கள் பலரும் சொந்த ஊர் சென்றனர். இதனால் அன்றைய தினம் கோவையில் உள்ள அனைத்து பஸ் ஸ்டாண்டுகளும், ரயில் நிலையங்களும் நிரம்பி வழிந்தனர்.

இதனிடையே, சொந்த ஊர் சென்ற மக்கள் கோவைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் கோவையின் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கோவைக்கு வரும் மக்கள் பலர் ரயில்கள் மூலமாகவும் வருவதால் கோவை ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது. நெரிசலைக் கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இன்று மாலை 6 மணிக்கு மேல் கோவையில் உள்ள பல்வேறு சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe