கோவையில் நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம்- காவல் கண்காணிப்பாளர் அதிரடி...

published 3 days ago

கோவையில் நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம்- காவல் கண்காணிப்பாளர் அதிரடி...

கோவை: கோவை மாவட்டத்தில் காவலர்கள் லஞ்சம் கேட்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு புகார்கள் வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் 4 காவலர்கள் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி பேரூர் மதுவிலக்கு பிரிவில் பணிபுரியும் தலைமைக்காவலர் மதன்குமார் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர்களிடம் பணம் பெற்றதற்காகவும் அதேபோல் பேரூர் மதுவிலக்கு பிரிவில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் பிரபாகரன் கள் இறக்குபவர்களிடம் பணம் கேட்டதற்காகவும் புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

அதேபோல வடக்கிபாளையம் சோதனை சாவடி வழியாக செல்லும் லாரி ஓட்டுநர்களிடம் பணம் பெற்றதாக தலைமை காவலர் செல்வகுமார் மற்றும் காவலர் பஞ்சலிங்கம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe