கோவையில் நடைபெற்ற ஊடகவியலாளர் பயிலரங்கம்...

published 2 hours ago

கோவையில் நடைபெற்ற ஊடகவியலாளர் பயிலரங்கம்...

கோவை: இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிக்கை தகவல் அலுவலகம் சென்னையின் சார்பில் சைபர் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு பயணம் குறித்த "ஊடகவியலாளர் பயிலரங்கு" நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஹோட்டல் அலங்கார் கிராண்டில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள்,  ஊடகத்துறை மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வில், V.Palanichamy IIS, DG I/C South Zone அவர்கள் பொய்யான செய்திகள் பரப்பப்படுவதை தடுப்பதில் ஊடகத்தின் பங்கு குறித்தும், சரியான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகத்தின் பொறுப்புணர்வு குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வின் முதல் அமர்வில் M.Rajkumar IFS, Protector of Emigrants அவர்கள் சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், முறையான வகையில் வெளிநாட்டுக்கு பயணம் செய்யும் வழிமுறைகள் குறித்தும் விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவு காவல் அதிகாரிகள் மற்றும் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு நிறுவனத்தின் அதிகாரிகள் பயிலரங்குகளை முன்னெடுத்தனர்.

இந்நிகழ்வினை P.Arunkumar, JD PIB அவர்கள் மற்றும் பத்திரிக்கை தகவல் அலுவலக பணியாளர்கள் ஒருங்கிணைத்தனர்.

இப்பயிலரங்கில், ஊடகவியலாளர்கள் பலர் பல்வேறு சந்தேகங்களை துறை வல்லுநர்களிடம் கேட்டறிந்து தெளிவு பெற்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe