சூலூரில் அமைய உள்ள இராணுவ தொழிற்பூங்கா- MLA உடன் வந்து மனு அளித்த விவசாயிகள்...

published 3 days ago

சூலூரில் அமைய உள்ள இராணுவ தொழிற்பூங்கா- MLA உடன் வந்து மனு அளித்த விவசாயிகள்...

கோவை: கோவை மாவட்டம் சூலூர் வரப்பட்டியில், இராணுவ தொழிற் பூங்கா அமைய உள்ளது. அண்மையில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆய்வு மேற்கொண்டிருந்தார். 

இந்நிலையில் தங்கள் விவசாய நிலத்திற்கு செல்ல இடையூறு இல்லாத வகையில், பாதை அமைத்து தரக்கோரி சூலூர் வரப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் சூலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

டிட்கோ நிறுவனம் சார்பில், அமைய உள்ள இராணுவ தொழிற் பூங்காவில் மேற்கு எல்லையை ஒட்டி, தங்களுக்குப் பாத்தியப்பட்ட விவசாய நிலங்கள் இருப்பதாகவும் மேற்படி விவசாய நிலத்திற்கு, தொழிற் பூங்கா அமைய உள்ள  நிலத்தின் வழியாக தங்களுக்கு பாத்தியப்பட்ட பாதை உள்ளது என்று தெரிவித்துள்ள விவசாயிகள்,

தற்போது தங்களது விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையை டிட்கோ நிறுவனம் எடுக்க உள்ளதாக தகவல் தெரிய வருவதாகவும் தங்களுக்கு இந்த பாதையை தவிர வேறு வழி இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

எனவே தங்களது விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையில் எவ்வித இடையூறும் இல்லாமல் தொழிற் பூங்காவின் வழியாக வரும் தென்வடல் ரோட்டில் இருந்து 40 அடி அகலத்தில் பாதை அமைத்துக் கொடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe