கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் பாட்டிலுடன் வந்த மாற்றுத்திறனாளி...

published 1 week ago

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் பாட்டிலுடன் வந்த மாற்றுத்திறனாளி...

கோவை; கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ்(மாற்றுத்திறனாளி). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடையின் அருகிலேயே ராஜேந்திரன் என்பவரும் கடை வைத்துள்ளதாக தெரிகிறது. நிலையில் வியாபாரம் சம்பந்தமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இது குறித்து மைக்கேல் ராஜ் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக பாட்டிலில் டீசல் எடுத்து கொண்டு வந்தார். இவரைப் பார்த்த பாதுகாப்பு பணி காவலர்கள் உடனடியாக அந்த டீசல் பாட்டிலை கைப்பற்றினர்.

இது குறித்து பேசிய அவர் தன்னை தொழில் செய்ய விடுவதில்லை எனவும் லோன் வாங்கப்பட்டுள்ள வங்கியையும் அரசு மாற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe