முதல்வர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும், இல்லையெனில் மாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்படும்- கோவையில் பி.ஆர்.பாண்டியன் தெரிவிப்பு...

published 2 days ago

முதல்வர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும், இல்லையெனில் மாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்படும்- கோவையில் பி.ஆர்.பாண்டியன் தெரிவிப்பு...

கோவை: முதலமைச்சர் தன்னை மாற்றிக் கொள்வார் என எதிர்பார்ப்பதாகவும், இல்லையென்றால் விவசாயிகள் மாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்படும் என கொங்கு மண்டல நீராதார உரிமைகள் மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்..

கோவை கோபாலபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் கொங்கு மண்டல நீர் ஆதார உரிமைகள் மீட்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பி. ஆர். பாண்டியன், ஏற்கனவே தமிழ்நாடு அரசு பாண்டியாறு- பொன்னம்பலாறு திட்டம், நல்லாறு- நீராறு திட்டம் குறித்து  தமிழ்நாடு அரசு 40 க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுவதாகவும் அதேபோல் பம்பை, அச்சங்கோயில் ,வைப்பாறு திட்டம் கிடப்பில் இருப்பதாகவும், இந்த திட்டங்கள் குறித்து மறு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பதற்கான தேவை ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். 

மேகதாது மற்றும் ராசி மணல் பகுதியில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள்,நன்மைகள் குறித்து கர்நாடக தமிழக விவசாயிகள் இணைந்து இரண்டு கட்ட பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சமூக தீர்வை எட்டி இருப்பதாகவும், இதனால் காவிரியை வைத்து நடத்தபட்ட அரசியல் முடிவுக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்த பி.ஆர். பாண்டியன் அதில் பங்கேற்ற கேரளா மாநிலத் தலைவர்கள் கேரளா தமிழ்நாட்டுக்கு இடையிலான நீர் பாசன பிரச்சனைகள் குறித்து விவசாயிகள் மத்தியில் ஒரு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற முடிவு அடிப்படையில்  கொங்கு மண்டல விவசாயிகள் மத்தியில் ஆலோசனை மேற்கொண்டதாகவும் அதில் யாருடனெல்லாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், அதில் எடுக்கப்படக்கூடிய முடிவை இரு மாநில முதலமைச்சர்களை சந்தித்து வலியுறுத்துவது என்ற தீர்மானம் கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டதாகவும், கேரளா தமிழக விவசாயிகள் இணைந்து பேசக்கூடிய தேதி கேரள மாநில விவசாயிகளுடன் கலந்து பேசி அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் நொய்யல், அமராவதி உள்ளிட்ட நதிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க இரும்பு கரம் கொண்டு அடக்குவதற்கான கடுமையான சட்டம் தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என தெரிவித்தவர்.

அண்டை மாநிலங்களை நம்பியுள்ள நீராதரங்கள் அண்டை மாநில பிரச்சனைகளால் தடுக்கப்படுவதாகவும், அண்டை மாநிலங்களில் ஏற்படக்கூடிய பேரழிவு பெருமழையை வெளியேற்றும் வடிகால்களாகவும், அண்டை மாநிலங்களில் உள்ள கழிவுநீரை வெளியேற்றும் கால்வாயாக தமிழ்நாடு உள்ளதாகவும், இதிலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது என தெரிவித்தார்.

மேலும் பேச்சுவார்த்தைக்காக உருவாக்கப்படும் குழு அண்டை மாநில உறவுகளை பலப்படுத்தும் என தெரிவித்தவர் கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்திருக்குமேயானால் அணைகள் கட்டுவது குறித்த விபரங்கள் நமக்கு தெரிந்திருக்கும் எனவும் சிறுவானி மற்றும் சிலந்தியாற்றில் கட்டப்பட்டு வரும் அணைகள் கட்டுமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம், புதிய நீர் பாசனங்களை விரிவு படுத்துவது என்பது இரண்டாவது, வருகின்ற நீராதார உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பது முதன்மையானது எனவும் அதற்கான பேச்சுவார்த்தையை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும் என்பதற்காக தான் இரண்டு மாநில விவசாயிகள் அமர்ந்து பேசி  திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தான் கூட்டம் நடத்தப்படுவதாகவும், இதில் எவ்வித அரசியலும் இல்லை என தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2024 என்ற சட்டத்தை கொண்டு வந்திருப்பதாக குறிப்பிட்ட பி.ஆர். பாண்டியன், இந்த சட்டம் வருவதற்கு முன்பாகவே மத்திய அரசு கொண்டு வருகின்ற பெட்ரோலியம், நிலவாய்வு திட்டங்களை தடுக்க முடியாது என மத்திய அரசு வைத்திருப்பதாகவும், இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு தமிழ்நாடு அரசின் கையில் இருக்கிறது எனவும் குழாய்களை விளைநிலங்கள் வழியாக எடுத்துச் செல்லாமல் , சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டும் எனவும் தற்போது எரிவாயு குழாய. அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சூலூரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் தானும் போராட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், மேலும் இந்த குழாய்களை விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் படை நிலங்களில் அமைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பி ஆர் பாண்டியன் விவசாயிகளை குற்றவாளியாக சித்தரிப்பது அரசின் வேலை அல்ல, அரசின் திட்டங்களை எதிர்ப்பது விவசாயிகளின் வேலை அல்ல எனவும் விவசாயிகளின் விலை நிலங்களை வழியாக உயர் மின் கம்பங்களை கொண்டு செல்லும் போது ஆபத்து ஏற்படும் அதனால் புதைவடமாக கொண்டு செல்ல வேண்டும் என தான் விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள் எனவும் அதை ஏற்க மறுத்து விவசாயிகளை சிறை வைப்பதும் காவல்துறையை பயன்படுத்துவதும் என்ன நியாயம் என கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரிந்து நடக்கிறதா? தெரியாமல் நடக்கிறதா ? அல்லது கொடுத்த வாக்குறுதி மறந்துவிட்டு பேசுகிறாரா? என தெரியவில்லை என தெரிவித்தவர், காட்டுப்பள்ளி துறைமுகத்தை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்தவுடன் என கூறியவர், இன்று இன்று அந்த துறைமுகத்திற்கு அரசுக்கு சொந்தமான 3000 ஏக்கர் ஏரி வழங்கப்பட்டிருக்கிறது எனவும் அங்கே சாலை அமைக்க கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் எட்டு வழி சாலை காட்டுப்பள்ளி துறைமுகத்தையும் எர்ணாகுளம் துறைமுகத்தையும் இணைப்பதற்கான சாலைதான் எனவும் அதெல்லாம் பேச்சு வார்த்தை இருப்பதாக வருகிற செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.  

இதைவிட மோசமானது என்னவென்றால் தான் ஆட்சிக்கு வந்தால் ஒரு குழில் நிலம் கூட எடுக்க விட மாட்டேன் என முதலமைச்சர் கூறினார், ஆனால் தமிழ்நாடு நில உரிமைச் சட்டம் 2024 நிலம் மட்டுமல்ல நீர்நிலைகளையும் அபகரித்துக் கொள்ள வழி வகுக்கிறது எனவும் அந்த விளைநிலங்கள் தனக்கு சொந்தமானது என விவசாயிகள் மறுத்தால் குண்டர் சட்டத்தில் அடைப்பேன் என சட்டம் கொண்டு வருவதற்கு முன்னதாகவே, திருவண்ணாமலை மாவட்டம் மேல்மாவில் 12 விவசாயிகள் மீது கொண்ட சட்டம் பாய்ந்ததும் திமுக அரசில்தான், ஆகவே முதலமைச்சர் தன்னை மாற்றிக் கொள்வார் என எதிர்பார்ப்பதாகவும், இல்லையென்றால் விவசாயிகள் மாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்படும் என தெரிவித்தார்..

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe