கோவையில் தங்க நகை தொழில் பூங்கா- ஓவியம் மூலம் முதல்வருக்கு நன்றி தெரிவித்த கோவை கலைஞர்...

published 1 day ago

கோவையில் தங்க நகை தொழில் பூங்கா- ஓவியம் மூலம் முதல்வருக்கு நன்றி தெரிவித்த கோவை கலைஞர்...

கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு நேற்று முன் தினம் வருகை புரிந்திருந்த போது கெம்பட்டி காலணி பகுதிக்கு சென்று தங்க நகை தொழில் புரியும் பொற்கொல்லர்களை சந்தித்து அவர்களது குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.


முதல்வரிடம் கோவையில் தங்க நகை பூங்கா வேண்டும், உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்திருந்தனர். தொடர்ந்து நேற்று பெரியார் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய முதல்வர் கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பை தங்க நகை தொழிலாளர்கள் கொண்டாடி முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா முதல்வரின் அறிவிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உருகியது நெஞ்சம் என்ற தலைப்பில் முதல்வர் பொண் உருக்குவது போல் ஓவியம் வரைந்து முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe