கோவையில் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்…

published 2 weeks ago

கோவையில் அரசு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்…

கோவை: கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஆதரவாக குரல் கொடுத்து தேர்தல் வாக்குறுதியில் பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆன பிறகு திட்டத்தை அமல்படுத்தாமல் அரசு ஊழியர்களை வஞ்சிப்பதாக குற்றச்சாட்டி உள்ளனர்.

மேலும் இந்தியாவில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ஊழியர்களுக்கு 22 ஆண்டுகளாக ஓய்வூதியம் பணிக்கொடை, குடும்பம் ஓய்வூதியம் வழங்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான் என்றும் தமிழக அரசு ஊழியர்கள் வஞ்சித்து வருவதாக வேதனையை தெரிவித்தனர்.

திமுகவின் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி 309 படி புதிய திட்டத்தை ரத்து செய்ய பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆனால் தற்போது வரை அதற்கு எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை.

மத்திய அரசின் சோமநாத் கமிட்டி அறிக்கை மற்றும் ஆந்திரா ஓய்வூதிய திட்டம் இரண்டு ஆண்டில் எது தமிழ்நாட்டுக்கு பொருத்தமானது என்று தமிழக முதல்வரிடம் கலந்து பேசி முடிவை அறிவிப்போம் என்று கடந்த ஆண்டு நிதியமைச்சர் அறிவித்தபடி முடிவை அறிவிக்க வேண்டும்.

மேலும் பணிக்கொடை வழங்க வேண்டும்,குடும்பம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe