கோவையில் பெட்ரோலிய எண்ணெய் குழாய்கள் பதிப்பு பிரச்சனை- ஆட்சியருடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை...

published 3 days ago

கோவையில் பெட்ரோலிய எண்ணெய் குழாய்கள் பதிப்பு பிரச்சனை- ஆட்சியருடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை...

கோவை: கோவையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செயல்படுத்தும் இருகூர் முதல் முத்தூர் வரையிலான எண்ணெய் குழாய் திட்டத்தை முதலமைச்சரின் வாக்குறுதி படி, சாலையோரமாக திட்டத்தை நிறைவேற்ற கோரியும், தமிழ்நாடு அரசு இது சம்பந்தமாக முடிவெடுக்கும் வரை காவல்துறை பாதுகாப்பை திரும்ப பெற்று திட்டப் பணிகளை நிறுத்தி வைக்குமாறும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

பாரத் பெட்ரோலிய நிறுவனம் கோவை இருகூரில் இருந்து பெங்களூரு வரை விவசாய விளை நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்கும் நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் குழாய் கரூர் வரை அமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த எண்ணெய் குழாய் அருகிலேயே மீண்டும் ஒரு எண்ணெய் குழாய் அமைக்க திட்டமிட்டுள்ளார்கள் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். 

ஏற்கனவே இருக்கும் எண்ணெய் குழாயும் புதிதாக அமைக்கப்பட உள்ள எண்ணெய் குழாயும் சாலையோரமாக தான் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக கூறிய விவசாயிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் இது குறித்து விவசாயிகளுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe