விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் - திவிக மனு

published 2 years ago

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள்  கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் - திவிக மனு

கோவை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றி நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

வரும் 31ம்  தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சிலை அமைப்பது ஆகியவற்றை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடத்துவதை உறுதி செய்ய கூறியும் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாநகர மாவட்ட தலைவர் நேரு தாஸ் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், இந்து அமைப்புகள் பலரும் பல்வேறு குழுக்களாக பிரிந்து தனித்தனியாக வெவ்வேறு அமைப்புகளின் பெயரால் வெவ்வேறு நாட்களில் பல்வேறு இடங்களில் வைப்பதற்கு அனுமதி பெறுவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் அலுவலகம் செல்லும் ஊழியர்கள் பொதுமக்கள் என பலருக்கும் இரண்டு வார காலம் இடையூறுகளை சந்திக்க வேண்டி உள்ளதாகவும், ஊர்வலத்தின் பொழுது சரக்கு வாகனங்களில் ஏராளமானவர் ஏறிக்கொண்டு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் செல்வதால் சில நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகிறது எனவும் எனவே உயர்நீதிமன்றங்களும் உச்சநீதிமன்றமும் அளித்துள்ள கட்டுப்பாடுகளையும் வழிகாட்டுதல்களையும் கருத்தில் கொண்டு அவற்றால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்து ஊர்வலத்தில் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த ஊர்வலங்களில் நடைபெறும் விதிமீறல்கள் ஏதேனும் இருக்குமாயில் அதனை வீடியோ பதிவு செய்வதற்கு தங்களுக்கு அனுமதி வழங்கி பாதுகாப்பும் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் விநாயகர் சிலைகள் ரசாயனங்களால் தயார் செய்யப்படுவதாகவும் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe