மீட்டிங் முடிஞ்சுதா.. எட்றா வாழைத்தார.. கோவையில் முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் வாழைத்தாரை தூக்கிச்சென்ற பொதுமக்கள்

published 2 years ago

மீட்டிங் முடிஞ்சுதா.. எட்றா வாழைத்தார.. கோவையில் முதலமைச்சர்  பங்கேற்ற விழாவில் வாழைத்தாரை தூக்கிச்சென்ற பொதுமக்கள்

கோவை: கோவையில் முதலமைச்சர் பங்கேற்ற நலத்திட்ட நிகழ்ச்சி முடிந்த கையோடு அங்கிருந்த பொதுமக்கள் தோரணத்திற்காக கட்டப்பட்டிருந்த வாழைத்தார் மற்றும் இளநீர் ஆகியவற்றை தூக்கி சென்றனர்.


நான் இதையெல்லாம் எதிபார்க்கிற ஸ்டாலின் அல்ல.. கோவையில் முழங்கிய முதலமைச்சர்

கோவை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 3 நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்தார். இன்று காலை கோவை ஈச்சனாரி அருகே தனியார் கல்லூரிக்கு எதிரே உள்ள மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

அங்கு மிகப் பிரமாண்டமாக நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, கோவை மாநகராட்சி உள்பட பல்வேறு துறைகளின் சார்பில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 62 பேருக்கு ரூ.588 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  இந்தியாவிலேயே 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒரே நேரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது இதுவே முதல்முறையாகும்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பயனாளிகள், திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 5 ஆயிரம்  பேர் வந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசி முடித்த அடுத்த சில நிமிடங்களில் புறப்பட்ட மக்கள், தோரணத்திற்காக கட்டப்பட்டிருந்த இளநீர் வாழைத்தார் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்றனர்.

அங்கிருந்த ஏராளமான வாழைத்தார்கள் இளநீர்களை வரிசையாக பொதுமக்கள் தோலில் சுமந்தபடி தூக்கிச் சென்றது காண்பவர்களுக்கு நகைப்பையூட்டியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe