கோவையில் மழை வரப்போகுதே... 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

published 17 hours ago

கோவையில் மழை வரப்போகுதே... 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

கோவை: கோவையில் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கோவையில் இன்று ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், நாளை லேசான மழையும் பதிவாக வாய்ப்புள்ளது. நாளை குறைந்தது 23 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.

ஜனவரி, 16,17ம் தேதிகளில் கோவையில் மழைக்கு வாய்ப்பு இல்லை. இந்த இரண்டு நாட்களிலும் குறைந்தது 21 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 31 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.

ஜனவரி 18ம் தேதி புறநகரில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த நாளில் குறைந்தது 22 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.

ஜனவரி 19 மற்றும் 20ம் தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இந்த நாட்களில் குறைந்தது 23 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe