கோவையில் SDPI நடத்தும் மாநாட்டு திடலின் பெயரை மாற்ற வேண்டும்- பாஜக புகார்...

published 4 days ago

கோவையில் SDPI நடத்தும் மாநாட்டு திடலின் பெயரை மாற்ற வேண்டும்- பாஜக புகார்...

கோவை: கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் நாளை மறுநாள் SDPI கட்சியின் சார்பில் வக்பு உரிமை மீட்பு மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு முன்னதாக பேரணியும் நடைபெற உள்ளதாக தெரிகிறது. அந்த மாநாடு பிலால் ஹாஜியார் திடல் என்ற இடத்தில் நடைபெற போவதாக SDPI யினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அது போன்று ஒரு திடல் கோவையில் இல்லையென்றும் வேண்டுமென்றே SDPI கட்சியினர் அப்பெயரை வைத்து குந்தகம் விளைவிக்க் எண்ணுகிறார் என கூறியும் இது பற்றி விசாரணை நடத்த வேண்டுமென பாஜக மாநில பொதுசெயலாளர் ஏபி முருகானந்தம் மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து புகார் மனு அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 
கோவையில் sdpi கட்சியின் மாநாடு நடைபெறுகின்றது, இது தொடர்பாக சுவர் விளம்பரம், நோட்டீஸ் வழங்கி உள்ளனர் என கூறிய அவர் 19 தேதி நடக்கவுள்ள மாநாட்டில் பிலால் ஹாஜியார் திடல் என்ற பெயரை உருவாக்கி அதில் நடத்த உள்ளனர் என்றார்.
அவர்கள் குறிப்பிட்டுள்ள பெயரில் எந்த திடலும் இல்லை என்றும் கோவையில் யாரிடம்  கேட்டால் அது போன்று இருப்பது தெரியாது என தெரிவித்தார்.


பிலால் ஹாஜியார் தீவிரவாதி என்றும் அவருடைய பெயரில் எப்படி திடலுக்கு பெயர் வைக்கலாம் என கேள்வி எழுப்பிய அவர் அவரால் இந்து அமைப்பைச் சார்ந்த வீரசிவாவை நாங்கள் இழந்துள்ளோம் என்றும் அவரின் கொலை வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்டவர் பிலால் ஹாஜியார் என்றும் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட நபர் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

பாட்ஷா ஊர்வலம் எப்படி நடத்தினார் என்று அனைவருக்கும் தெரியும் என தெரிவித்த அவர் இரண்டு சமூகத்தியின் எதிராக சண்டை முட்ட பார்த்தார்கள் என கூறினார். தமிழக அரசு இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும், கோவையில்
Jamesha mubin என்பவர் மனித வெடிகுண்டு தாக்குதலில் கோவையில் ஈடுபட்டார் என்றும் கூறினார்.

பிலால் ஹாஜியார் திடல் என்று அறிவித்து நடைபெறும் பேரணிக்கு அனுமதி மறுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்ட இயக்கம், அதனுடைய அரசியல் கட்சி தான் SDPI என்பது பல தரப்பட்ட தரவுகள் சொல்லுகின்றது என்று கூறினார். கோவை அமைதியான ஊர், அதை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என தெரிவித்தார்.

திடலுக்கு பெயர் வைக்க வேண்டுமென்றால் அப்துல்கலாம், கோட்டை அமீர் என்ற பெயர்களில்  வைக்கலாம், ஆனால் தீவிரவாதி பெயர்களில் வைக்க கூடாது என்றார். இது பற்றி மாநகர காவல் ஆணையாளரிடம் கூறியிருப்பதாகவும் ஆணையாளரும் இதனை பரிசீலிப்பதாக கூறியிருப்பதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe