Big Breaking: காதலனைக் கொலை செய்த இளம் பெண்ணுக்கு தூக்கு!

published 1 day ago

Big Breaking: காதலனைக் கொலை செய்த இளம் பெண்ணுக்கு தூக்கு!

திருவனந்தபுரம்: காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு தூக்கு தண்டனை விதித்தது நீதிமன்றம்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஷாரோன் ராஜ், கிரீஷ்மா (24). இருவரும் காதலித்து வந்த நிலையில், கிரீஷ்மா கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கி தனியார் கல்லூரியில் ரேடியாலஜி படித்து வந்தார்.

இதனிடையே கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் அவரது பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். இது கிரீஷ்மாவின் சம்மதத்துடன் நடைபெற்றுள்ளது.

இதனிடையே தன்னை மறந்துவிடுமாறு கிரீஷ்மா ஷாரோன் ராஜிடம் கூறியுள்ளார். ஆனாலும், ஷாரோன் ராஜ் அவரை காதலித்து வந்துள்ளார். இதனால் அச்சமடைந்த கிரீஷ்மா, தனிமையில் இருக்கலாம் என்று ஷாரோனை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து ஷாரோனை கொலை செய்தார்.

கடந்த 2022ம் ஆண்டு நடந்த இந்த கொலை சம்பவம் தேசத்தையே உலுக்கிய நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியது நெய்யாற்றின் கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம். அதன்படி,கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனையும், கொலைக்கு உடந்தையாக இருந்த கிரீஷ்மாவின் மாமன் நிர்மல்குமார் நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe