வெள்ளலூர் கொலை வழக்கில் சிறுவன் உட்பட ஏழு பேர் கைது...

published 2 days ago

வெள்ளலூர் கொலை வழக்கில் சிறுவன் உட்பட ஏழு பேர் கைது...

கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர்  இன்பரசன்(19). பிளம்மிங் வேலை செய்து வந்தார். இவரை கடந்த 8 ம் தேதி குடியிருப்புக்கு பின்புறம் ஒரு கும்பல்  வெட்டி கொலை செய்தது.

இது குறித்து போத்தனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில்  3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது கொலை செய்தவர்களை தேடி வந்தனர். தனிப்படை போலிசாரின் விசாரணையில் இந்த கொலையில் ஏழு பேருக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து தனிப் படையினர் அவர்களை  தேடி வந்தனர்.

இந்நிலையில் கோவை- பொள்ளாச்சி சாலையில் பதுங்கி இருந்த சுபாஷ், ஆகாஷ்குமார், நாகராஜ், மோகன் பிரசாத், நிஷாந்த், கெளதம், மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் இருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்ததில் இருவருக்கும் கை கால்களில் காயம் ஏற்பட்டதாகவும் அவர்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து  பின்னர் 7 பேரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இன்பரசன் தரப்பிற்கும் சுபாஷ் தரப்பிற்கும் ஏற்கனவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி புத்தாண்டு இரவு அன்று சுபாஷ் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததாகவும் அதனை இன்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் தட்டி கேட்டபோது தகராறு ஏற்பட்டு சுபாஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் அவரது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பர்களை அழைத்து வந்து இந்த கொலையை நிகழ்த்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டவர்கள் மீது 126, 103, 351(3), 61(2), 49- BNS ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe